தென்னிந்திய சினிமா

‘கேம் சேஞ்சர்’ விவகாரம்: மன்னிப்பு கோரிய அல்லு அரவிந்த்!

ஸ்டார்க்கர்

‘கேம் சேஞ்சர்’ குறித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கோரியிருக்கிறார் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்.

‘தண்டேல்’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வொன்றில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்திடம் ‘கேம் சேஞ்சர்’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒரே வாரத்தில் தில் ராஜூ வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இரண்டையும் பார்த்துவிட்டார் என குறிப்பிட்டார். இது ‘கேம் சேஞ்சர்’ மற்றும் ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’ படங்களின் வசூலைக் குறிப்பிட்டு தான் தெரிவித்தார் அல்லு அரவிந்த். இந்தப் பதிலானது ராம் சரண் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘தண்டேல்’ படத்தினை திருட்டுத்தனமாக பார்ப்பவர்கள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் அல்லு அரவிந்த்திடம் மீண்டும் ‘கேம் சேஞ்சர்’ குறித்த கேள்வி எழுப்பட்டது. அதற்கு, “சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ‘கேம் சேஞ்சர்’ குறித்து என கருத்தினைக் கேட்டார். நான் நேரடியாக பதில் கூற விரும்பினேன். தில் ராஜு ஒரு வாரத்திற்குள் ஏற்ற, இறக்கங்களைக் கண்டுகொண்டார் என்று தெரிவிக்க விரும்பினேன். ஆனால், அது தவறான வார்த்தைகளில் கூறிவிட்டேன்.

நான் ராம் சரணை பற்றி தவறாக பேசியதாக நினைத்து என்னை விமர்சனம் செய்கிறார்கள். நான் தவறாக சொன்ன வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன். சரண் என் மகன் போன்றவர். நாங்கள் ஒரு அழகான உறவைப் பகிர்ந்து வருகிறேன். ஆகையால் இந்த சர்ச்சையினை இத்துடன் விட்டுவிடுங்கள். நான் சொன்னது தவறு என்பதை உணர்ந்து அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் அல்லு அரவிந்த்.

SCROLL FOR NEXT