ஜாமீனில் வெளியே வந்தவுடன் நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் தர்ஷன்.
ரசிகரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பிரபல கன்னட நடிகர் தர்ஷன். இந்தச் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அவரின் காதலியும், நடிகையுமான பவித்ராவும் கைது செய்யப்பட்டார். மேலும், சிறையில் தர்ஷனுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு தனது சமூக வலைதளத்தில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் தர்ஷன். அதில் “எனது ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அவர்களுக்கு என்ன சொன்னாலும் அது போதுமானதாக இருக்காது. அவர்கள் எனக்கு அளித்த அன்பு மிகவும் பெரியது. அதை எப்படி திரும்ப தருவது என்று தெரியவில்லை.
இந்த முறை ஒரே பிரச்சினை எனது உடல் நிலை மட்டுமே. மற்ற எதுவும் இல்லை. நான் நீண்ட நேரம் நிற்க முடியாது. ஆகையால் எனது பிறந்த நாளுக்கு நேரில் சந்திப்பதை தவிருங்கள். இதற்காக, ஊசி போட்டுக் கொண்டால் 15-20 நாட்கள் நன்றாக உணர்கிறேன். ஆனால், அதன் பின் மீண்டும் வலி வந்துவிடுகிறது. அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ள வேண்டும். இதற்காக மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளேன். உங்களுக்கு எனது தண்டுவடம் நோயின் பிரச்சினைகள் குறித்து தெரியும்.
எனக்காக காத்திருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. அவர்களுக்கு நான் அநீதி செய்யக் கூடாது. ஏனென்றால் அவர்கள் இதர படங்களை திட்டமிடுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் தர்ஷன்.
ನನ್ನ ಪ್ರೀತಿಯ ಸೆಲೆಬ್ರಿಟಿಗಳಿಗೆ ನನ್ನ ಪ್ರೀತಿಯ ಮನವಿ ಈ ವರ್ಷ ನನ್ನ ಹುಟ್ಟು ಹಬ್ಬವನ್ನು ಆಚರಿಸಿಕೊಳ್ಳುತ್ತಿಲ್ಲ ಕ್ಷಮೆ ಇರಲಿ
ಇಂತಿ ನಿಮ್ಮ ದಾಸ ದರ್ಶನ್ pic.twitter.com/ERczhYj6DC