தென்னிந்திய சினிமா

‘மார்கோ’ ரீமேக்கில் விக்ரம் நடிப்பது உண்மையா?

ஸ்டார்க்கர்

‘மார்கோ’ தமிழ் ரீமேக்கில் விக்ரம் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு விக்ரம் தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

மலையாளத்தில் ஹனிஃப் அடானி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான படம் ‘மார்கோ’. இந்தியளவில் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படத்தினை பார்த்துவிட்டு பல்வேறு திரையுலகினர் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.

சமீபத்தில் ‘மார்கோ’ பார்த்துவிட்டு உன்னி முகுந்தனை பாராட்டினார் விக்ரம். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியானது. இதனை வைத்து பலரும் ‘மார்கோ’ தமிழ் ரீமேக்கில் விக்ரம் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று பலரும் தெரிவித்தார்கள். இது பல்வேறு ஊடகங்களில் செய்தியாகவும் வெளியானது.

இது குறித்து விசாரித்த போது, அதில் உண்மையில்லை. ‘மார்கோ’ பார்த்துவிட்டு உன்னி முகுந்தனை பாராட்டினார் விக்ரம் என்று தெரிவித்தனர். இதன் மூலம் ‘மார்கோ’ தமிழில் ரீமேக்காக வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. விக்ரம் நடிப்பில் அடுத்ததாக ‘வீர தீர சூரன்’ வெளியாகவுள்ளது. இப்படம் மார்ச் மாதத்தில் வெளியிடலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT