பாபி கோலி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘டாகு மகாராஜ்’. பாபி தியோல், பிரக்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். நாக வம்சி தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஜனவரி 12-ம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியானது.
தமிழகத்தில் இப்படம் வெளியானாலும் இதன் தமிழ் டப்பிங் வெளியாகவில்லை. சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் தெலுங்கிலேயே வெளியானது. அதே போல இந்தியிலும் இப்படம் டப்பிங் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை (ஜன.17) வெளியாக உள்ளது. இதனை இயக்குநர் நெல்சன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தெலுங்கில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவரும் இப்படம் தமிழில் நாளை வெளியாவது பாலையா ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.