தென்னிந்திய சினிமா

ஆமிர்கான் தயாரிப்பில் இந்திப் படம்: சிவகார்த்திகேயன் உறுதி

ஸ்டார்க்கர்

ஆமிர்கான் தயாரிப்பில் இந்திப் படமொன்றில் நடிக்க இருப்பதை சிவகார்த்திகேயன் உறுதி செய்திருக்கிறார்.

ஹாலிவுட் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில் ஆமிர்கான் உடனான சந்திப்பு குறித்து பேசியிருக்கிறார். அதில், “இடையே ஒரு இந்திப் படம் பேசியது உண்மை தான். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்த வகையில் முடியவில்லை. ஆனால், இந்திப் படம் பண்ண ஆர்வமாக இருக்கிறேன்.

ஆமிர்கானை சில முறை சந்தித்தேன். உங்களுடைய முதல் இந்திப் படம் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். உங்களிடம் ஏதேனும் கதைகள் இருந்தால் கூட கொடுங்கள் என கூறியிருக்கிறார். இங்கு சில பணிகள் இருக்கிறது, அதை முடித்துவிட்டு சரியான கதை வரும்போது எடுத்து வருகிறேன் என ஆமிர்கானிடம் கூறியிருக்கிறேன்.

என் முதல் படம் அவருடைய தயாரிப்பில் இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். ஆகையால் அது எப்போது வேண்டுமானாலும் நடக்கும். அதை கதை தான் தீர்வு செய்யும்” என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம், சுதா கொங்காரா இயக்கி வரும் படம் ஆகியவற்றில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார்.

SCROLL FOR NEXT