தென்னிந்திய சினிமா

5 நாட்களில் 50 கோடி வசூல் - ‘மார்கோ’ படத்துக்கு பெரும் வரவேற்பு!

ஸ்டார்க்கர்

‘மார்கோ’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 5 நாட்களில் 50 கோடி வசூலித்துள்ளது. டிசம்பர் 20-ம் தேதி வெளியான மலையாள படம் ‘மார்கோ’. இப்படத்தின் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. உலகளவில் 5 நாட்களில் 50 கோடி வசூல் செய்திருக்கிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஹனிஃப் அடினி (Haneef Adeni) இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்துள்ள இப்படத்தினை ஷெரீப் முகமது தயாரித்துள்ளார். முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளார்கள். சுமார் 30 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டது.

தற்போது 55 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்திருப்பதால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது. அதுமட்டுமன்றி மலையாளத்தில் வரவேற்பு பெற்றிருப்பதால், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இதர மொழி ரீமேக் உரிமைக்கான பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT