அல்லு அர்ஜுன் கைதை தொடர்ந்து, ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் அதிகரித்திருக்கிறது.
‘புஷ்பா 2’ வெளியீட்டின்போது நடந்த சிறப்பு காட்சியில் கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அன்று மாலையே ஜாமீன் கிடைத்தாலும், அடுத்த நாள் காலையில்தான் அல்லு அர்ஜுன் விடுதலை செய்யப்பட்டார். ஒருநாள் முழுக்கவே அல்லு அர்ஜுன் பற்றிய பேச்சாகவே இருந்தது.
இது ’புஷ்பா 2’ படத்தின் வசூலில் எதிரொலித்திருப்பதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியில் ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் ரூ.500 கோடியை கடந்திருக்கிறது. மேலும், டிசம்பர் 14-ம் தேதி Book My Show தளத்தில் ‘புஷ்பா 2’ படத்துக்கு 11 லட்சம் டிக்கெட்கள் புக் செய்யப்பட்டு இருக்கிறது. படம் வெளியான 2-வது சனிக்கிழமை இவ்வளவு அதிகமாக டிக்கெட்கள் புக்கிங் செய்திருப்பதற்கு காரணம் அல்லு அர்ஜுன் கைது எதிரொலி தான் என்கிறார்கள்.
வடக்கு அமெரிக்காவில் 12 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது. மேலும் உலகளவில் சுமார் 1200 ரூபாய் கோடி வசூலை கடந்திருக்கிறது ‘புஷ்பா 2’ திரைப்படம். வார விடுமுறை நாட்கள் என்றாலும், இந்தளவுக்கான டிக்கெட் புக்கிங், வசூல் அதிகரிகப்பு அனைத்துமே அல்லு அர்ஜுன் கைது எதிரொலி மற்றும் திரையுலக பிரபலங்கள் ஒன்றிணைந்தது தான் காரணம் என்பதுதான்.