தென்னிந்திய சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ முதல் நாள் வசூல் எவ்வளவு? 

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.294 கோடி வசூலை குவித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இந்தியில் மிரட்டலான வரவேற்பு கிடைத்துள்ளது.

பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் இந்தி வெர்ஷன் முதல் நாளில் ரூ.65 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. ஆனால், ‘புஷ்பா 2’ இந்தி வெர்ஷன் அதன் சாதனையை முறியடித்து முதல் நாளில் ரூ.72 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. இது இந்தியில் வெளியான படங்களில் முதல் நாள் அதிகபட்ச வசூலாகும். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.294 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் முதல் நாள் வசூலான ரூ.222 கோடி சாதனையை முறியடித்து, முதல்நாளின் அதிகபட்ச ஓப்பனிங் கொண்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. இந்தியாவில் மட்டும் படம் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் திரை வாழ்வில் இது அதிகபட்ச ஓப்பனிங் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது ‘புஷ்பா 1’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வியாழக்கிழமை (டிச.5) வெளியானது. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ்.பின்னணி இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT