தென்னிந்திய சினிமா

முன்னாள் கணவரை சீண்டினாரா சமந்தா?

செய்திப்பிரிவு

நடிகை சமந்தா, வருண் தவணுடன் நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இதன் புரமோஷனுக்காக வருண் தவானும், நடிகை சமந்தாவும் கேள்விக் கேட்டுக்கொள்ளும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் முன்னோட்டம் இப்போது பிரைமில் வெளியாகியிருக்கிறது.

அதில், வருண் தவண், “உங்கள் வாழ்க்கையில் தேவையில்லாமல் எந்த விஷயத்துக்காக அதிகம் செலவு செய்திருக்கிறீர்கள்?" என சமந்தாவிடம் கேள்வி கேட்டார். அதற்கு சமந்தா, “அது என் ‘எக்ஸ்’-க்கு நான் செய்த விலைமதிப்பற்ற கிஃப்ட்'' என சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். இந்த புரமோஷன் வீடியோ வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT