தென்னிந்திய சினிமா

‘புஷ்பா 2’-வில் பணிபுரிவதை உறுதி செய்த இசையமைப்பாளர் தமன்

ஸ்டார்க்கர்

ஹைதராபாத்: அல்லு அர்ஜூன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தில் பின்னணி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருவதை தமன் உறுதி செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் பாடகர் கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் இசையமைப்பாளர் தமன். அப்போது அவர் பேசும்போது, “எனக்காக ‘புஷ்பா 2’ காத்திருக்கிறது. ஆகையால் கிளம்ப வேண்டும்” என்று தனது பேச்சில் இறுதியில் குறிப்பிட்டார். இந்தப் பேச்சின் மூலம் ‘புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருவது உறுதியாகி இருக்கிறது.

பாடல்களுக்கு மட்டுமே தேவி ஸ்ரீபிரசாத் பணிபுரிந்து வருகிறார். இந்த தகவல் கடந்த வாரம் வெளியானாலும், படக்குழுவினர் உறுதிப்படுத்தாமல் இருந்தார்கள். தற்போது தமனின் பேச்சு மூலம் அது உண்மையாகி இருக்கிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா 2’. பெரும் எதிர்பார்ப்புக்குரிய இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. டிசம்பர் 5-ம் தேதி இப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT