தென்னிந்திய சினிமா

100 நாட்கள் நடக்கவுள்ள தெலுங்கு ‘பிக் பாஸ்-2’ இன்று தொடக்கம்: நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார்

என்.மகேஷ் குமார்

தெலுங்கு ‘பிக் பாஸ்-2’ நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. 100 நாட்கள் வரை நடக்க உள்ள இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியை ‘நான் ஈ’ புகழ் நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார்.

இந்தியில் பிரபலமான ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சி, கடந்த ஆண்டு தமிழிலும் பிரபலமானது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுந்து வழங்கினார். இதன் 2-ம் சீசன் வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளது. இதையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். தமிழ் போலவே, தெலுங்கிலும் கடந்த ஆண்டு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், தெலுங்கில் ‘பிக் பாஸ்’ சீசன் 2 இன்று தொடங்குகிறது. இதை ‘நான் ஈ’ புகழ் நடிகர் நானி தொகுத்து வழங்க உள்ளார். நூறு நாட்கள் நடக்க உள்ள நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி கலந்து கொள்வார் என தகவல் வெளியானது. ஆனால், இதை அவர் மறுத்துள்ளார்.

SCROLL FOR NEXT