தென்னிந்திய சினிமா

‘எப்போதுமே முன்மாதிரியாக இருக்கிறார் சூர்யா’ - சந்தீப் கிஷன்

ஸ்டார்க்கர்

எப்போதுமே முன்மாதிரியாக இருக்கிறார் சூர்யா என்று சந்தீப் கிஷன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. பல்வேறு மொழிகளில் வெளியாக இருப்பதால், அனைத்து மாநிலங்களுக்கும் சென்று விளம்பரப்படுத்தி வருகிறார் சூர்யா.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘கங்குவா’ விளம்பரப்படுத்தும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சந்தீப் கிஷன் கலந்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சூர்யா குறித்து சந்தீப் கிஷன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சந்தீப் கிஷன், “எனது முதல் ஹீரோ சூர்யா அண்ணா. ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நான் 16-வது உதவி இயக்குநர் பணிபுரிந்தேன். இப்போது அவரது சொந்தம் போலவே விசாகப்பட்டினம் நிகழ்ச்சியில் என்னை நடத்தினார். கருணை, பணிவு மற்றும் கடின உழைப்பு என மனிதர் எப்போதுமே முன்மாதிரியாக இருப்பதற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT