தென்னிந்திய சினிமா

ரூ.2 கோடி கேட்டு நோட்டீஸா? - மியா ஜார்ஜ் மறுப்பு

செய்திப்பிரிவு

மலையாள நடிகையான மியா ஜார்ஜ், தமிழில் இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, கோப்ரா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு அஸ்வின் தாமஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட அவர், தொடர்ந்து நடித்து வருகிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கறிவேப்பிலை பொடி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ரூ.2 கோடி கேட்டு அவர் மீது வழக்குத் தொடர்ந்திருப்பதாகச் செய்தி வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மியா ஜார்ஜ், “இந்த தகவலே முரணாக இருக்கிறது. நிறுவனத்தின் பொருளை விளம்பரப்படுத்தும் ‘பிராண்ட் அம்பாசிடர்’ மீது உரிமையாளர் ஏன் புகார் கொடுக்க வேண்டும்? சமூக வலைதளத்தில் வந்துள்ள செய்திகளைப் போல எனக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை. யார் இதுபோன்ற பொய்யை பரப்பினார்கள் என்றும் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT