தென்னிந்திய சினிமா

லெவன் படத்துக்காக டி.இமான் இசையில் ஆங்கிலப் பாடல்

செய்திப்பிரிவு

நவீன் சந்திரா ஹீரோவாக நடிக்கும் த்ரில்லர் படம் ‘லெவன்’. இதில், ரியா ஹரி, அபிராமி, ஆடுகளம் நரேன், திலீபன், ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இதை ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. லோகேஷ் அஜில்ஸ் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்'எனும் ஆங்கிலப் பாடல் இடம்பெற்றுள்ளது. இதை இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதியுள்ளார். டி.இமான் இசையில் ஸ்ருதிஹாசன் இந்தப் பாடலை பாடியுள்ளார். இதை நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் வெளியிட்டார்.

இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் கூறும்போது, “படத்தில் இந்த ஆங்கிலப்பாடல் முக்கியமான இடத்தில் வருகிறது. கதையை நகர்த்தும் விதமாகத்தான் இருக்கும். காட்சிக்கு அவசியம் என்பதால் ஆங்கிலப் பாடலை வைத்துள்ளோம். டி. இமானின் இசையும் ஸ்ருதி ஹாசனின் குரல் வளமும் பாடலுக்கு மிகப்பெரிய பலமாகும். நாயகன் மற்றும் வில்லனைக் குறித்த பாடலாக இது அமைந்திருக்கிறது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெறும்” என்றார்.

SCROLL FOR NEXT