தென்னிந்திய சினிமா

’புஷ்பா 2’ குறித்து சிலாகிக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்

ஸ்டார்க்கர்

‘புஷ்பா 2’ படம் உருவாகி இருப்பது குறித்து பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

‘புஷ்பா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ‘புஷ்பா 2’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது.

‘புஷ்பா 2’ படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் தேவி ஸ்ரீபிரசாத். விரைவில் அமெரிக்காவில் இசைப் பயணம் ஒன்று செய்யவுள்ளார் தேவி ஸ்ரீபிரசாத். இதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அந்தச் சந்திப்பில் ‘புஷ்பா 2’ படம் குறித்து, “’புஷ்பா 2’ படத்தின் முதல் பாதி பார்த்துவிட்டேன். படத்தில் சில காட்சிகள் விருந்தாக இருக்கும். முதல் பாகத்தினை விட 10 மடங்கு பெரிதாக ‘புஷ்பா 2’ உருவாகி இருக்கிறது. சுகுமார் இயக்கிய விதமும், அல்லு அர்ஜுன் நடித்துள்ள விதமும் அனைவரையும் ஆச்சரியமடைய செய்யும்” என்று தெரிவித்துள்ளார் தேவி ஸ்ரீபிரசாத்.

SCROLL FOR NEXT