தென்னிந்திய சினிமா

யூடியூப் சேனல் மூலம் அவதூறு நடிகர், நடிகைகள் மீது வழக்கு

செய்திப்பிரிவு

மலையாள திரையுலகில் நடிகைகள் ம மற்றும் பெண்மையுஞர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை வெளியானதை அடுத்து சில நடிகைகள் வெளிப்படையாக பாலியல் புகார்களைக் கூறினர்.

கேரள மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த நடிகை ஒருவர், நடிகர்கள் இடைவேளை பாபு, முகேஷ், ஜெயசூர்யா, ஜாஃபர் இடுக்கி உட்பட சிலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் முகேஷ், இடைவேளை பாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஆலுவாவைச் சேர்ந்த அந்த நடிகை, நெடும்பாசேரி போலீஸில் புதிய புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், நடிகைகள் சுவாசிகா, பீனா ஆண்டணி அவரது கணவரும் நடிகருமான மனோஜ் ஆகியோர் யூடியூப் சேனலில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மலையாள நடிகையான சுவாசிகா, தமிழில், கோரிப்பாளையம், சாட்டை, லப்பர் பந்து உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

SCROLL FOR NEXT