ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். இந்தப் படம் டிச.20-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வர இருப்பதாகத் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.