நாக சைதன்யா, சாய் பல்லவி இணைந்து நடிக்கும் படம் 'தண்டேல்'. சந்து மொண்டட்டி இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்துக்காக, சிவராத்திரி பாடல் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நாக சைதன்யா, சாய் பல்லவியுடன் 1000 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். சேகர் மாஸ்டர் இந்த நடனத்தைப் பிரம்மாண்டமாக அமைத்துள்ளார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.