தென்னிந்திய சினிமா

தெலுங்கு ‘வேதாளம்’ படைத்த மற்றொரு மோசமான சாதனை!

ஸ்டார்க்கர்

‘போலா ஷங்கர்’ திரைப்படம் டிவி திரையிடலிலும் மோசமான சாதனையை பெற்றுள்ளது. அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘வேதாளம்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். மெஹர் ரமேஷ் இயக்கத்தில் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று, படுதோல்வியை தழுவியது.

சிரஞ்சீவி படங்களில் மிகவும் குறைந்த வசூலைப் பெற்ற படம் என்றெல்லாம் பேசப்பட்டது. மேலும், தயாரிப்பாளருக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. 2023, ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்பனையாகிவிட்டது. ஆனால், தொலைக்காட்சி உரிமையினை யாரும் கைப்பற்றவில்லை.

இறுதியாக ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றி செப்டம்பர் 15-ம் தேதி ஒளிபரப்பியது. இதன் பார்வையாளர்களை வைத்து கணக்கிடப்படும் டி.ஆர்.பி வெறும் 2.48 மட்டுமே பெற்றிருக்கிறது. இது மிகவும் குறைந்தளவு ஆகும். இதுவும் படத்துக்கு கிடைத்துள்ள இன்னொரு பெரும் அடி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT