மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து மலையாள திரையுலகினர் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் நடிகை ஒருவர், கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸாருக்கு அது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில், தான் கைது செய்யப்படாமல் இருக்க, கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு சித்திக் மனு தக்கல் செய்திருந்தார். அவரது மனுவை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.