ரவிசங்கர் 
தென்னிந்திய சினிமா

வில்லன் நடிகர் ரவிசங்கர் இயக்கும் ‘சுப்ரமண்யா’

செய்திப்பிரிவு

தமிழில், விஜய்யின் வேட்டைக்காரன், அருள்நிதி நடித்த உதயன், விதார்த் நடித்த கொள்ளைக்காரன், விஷ்ணு விஷால் நடித்த,இன்று நேற்று நாளை உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர், ரவிசங்கர். டப்பிங் கலைஞருமான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். சில படங்களை இயக்கியுள்ள இவர் தனது மகன் அத்வே ஹீரோவாக நடிக்கும் ‘சுப்ரமண்யா’ என்ற படத்தை இப்போது இயக்கியுள்ளார்.

இதை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர். விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார்.

தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடந்துவருகின்றன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT