தென்னிந்திய சினிமா

மர்மமான கேரக்டரில் மஞ்சு வாரியர்

செய்திப்பிரிவு

எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘ஃபுட்டேஜ்’. இதில் மஞ்சு வாரியர், விசாக் நாயர், காயத்ரி அசோக் உட்பட பலர் நடித்துள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் சார்பில் பினீஷ் சந்திரன் தயாரிக்கிறார்.

பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் மர்மமான கேரக்டரில் நடித்துள்ளார். ஷினோஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் கரோனா காலகட்டத்தில் நடக்கும் த்ரில்லராக உருவாகியுள்ளது. அனுராக் காஷ்யப் வழங்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஆக.2-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT