தென்னிந்திய சினிமா

ரத்தம் படிந்த முகம்: கவனம் ஈர்க்கும் சிவராஜ்குமாரின் ‘உத்தரகாண்டா’ தோற்றம்

செய்திப்பிரிவு

பெங்களூரு: கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘உத்தரகாண்டா’ கன்னட படத்தின் கதாபாத்திர தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

தனஞ்சயா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கன்னட படம் ‘உத்தரகாண்டா’. இந்தப் படத்தில் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு அமித் திரிவேதி இசையமைக்கிறார். கேஆர்ஜி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை ரோஹித் பதகி இயக்குகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் சிவராஜ்குமாரின் கதாபாத்திர தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘மாலிகா’ என்ற கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிப்பதை போஸ்டர் உறுதி செய்துள்ளது.

தோற்றம் எப்படி? - கையில் சுருட்டுடன், ரத்தம் தோய்ந்த முகத்துடன் டெரர் லுக்கில் காட்சியளிக்கிறார் சிவராஜ்குமார். மேலும், அவரது சட்டை மற்றும் கைகளில் ரத்தத்தின் சாயல் தெரிகிறது. மறுபுறம் தோட்டாக்களை தோளில் சுமந்திருக்கிறார். இந்த தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இந்தத் தோற்றத்தின் மூலம் படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தின் மூலம் கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 2 பாகங்களாக உருவாகும் இப்படத்தில் பாவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT