நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘தி டாக்ஸிக்’. கீது மோகன் தாஸ் இயக்கும் இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் முக்கியமான சகோதரி கேரக்டரில் இந்தி நடிகை கரீனா கபூர் நடிக்க இருந்தார். கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகியதால், நயன்தாரா நடிக்கிறார்.
இந்தி நடிகை ஹுமா குரேஷி உட்பட பலர் நடிக்கின்றனர். போதைப்பொருள் மாஃபியா கதையின் பின்னணியில் இந்தப் படம் உருவாகிறது.
பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்துக்காக, பெங்களூரு புறநகர் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 1950, மற்றும் 70-களில் நடப்பது போன்ற காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.