தென்னிந்திய சினிமா

குருவாயூர் கோயிலில் நடிகை மீரா நந்தன் திருமணம்!

செய்திப்பிரிவு

மலையாள நடிகையான மீரா நந்தன் தமிழில், ‘வால்மிகி’, ‘அய்யனார்’, ‘காதலுக்கு மரணமில்லை’, ‘சூரிய நகரம்’, ‘சண்டமாருதம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடிப்பை விட்டு விலகி, துபாயில் மலையாள எஃப்.எம். ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் லண்டனில் கணக்காளராக பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜு என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இவர்கள் திருமணம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் நேற்று காலை நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமண புகைப் படங்களை நடிகை மீரா நந்தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT