கைது செய்யப்பட்ட நடிகர் தர்ஷன் | படம்: முரளி குமார் 
தென்னிந்திய சினிமா

“வாய்மை வெல்லும்” - கன்னட நடிகர் தர்ஷன் மனைவி பகிர்வு

செய்திப்பிரிவு

பெங்களூரு: ரசிகரைக் கொன்ற வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ரசிகர்களே, தர்ஷன் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இன்று நாம் அவரை விட்டு பிரிந்து இருக்கும் இந்தச் சூழல் துரதிஷ்டவசமானது. வெளியே நிலவும் சூழ்நிலை குறித்து அவரிடம் நான் விரிவாக விளக்கினேன். அவர் நெகிழ்ந்து போனார்.

நம் நாட்டின் நீதித்துறையின் மீது நமக்கு அபார நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக வரும் நாட்களில் நல்லது நடக்கும். தர்ஷன் இல்லாத நேரத்தில் வார்த்தைகள், செயல்கள் மூலம் தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்களை அன்னை சாமுண்டேஸ்வரி கவனித்துக்கொள்வார் என்பதை உறுதியாக நம்புகிறேன். ரசிகர்களாகிய நீங்கள் அமைதியாக இருங்கள். அதுவே எங்களுக்கான மிகப் பெரிய பலம். இதுவும் கடந்து போகும். வாய்மை வெல்லும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசுவாமி என்பவரை ஆள்வைத்து, சித்தரவதை செய்து கொலை செய்த வழக்கில் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT