மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரன் யுவராஜ்குமார். ‘யுவா’ என்ற படம் மூலம் அறிமுகமான இவர், ஸ்ரீதேவி பைரப்பா என்பவரை காதலித்து 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்து, குடும்ப நல நீதிமன்றத்தில் யுவராஜ்குமார் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் ‘நடிகை சப்தமி கவுடாவால் தான் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது” என்று ஸ்ரீதேவி பைரப்பா கூறியிருந்தார். இது கன்னட திரையுலகில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது பெயர் இழுக்கப்பட்டதை அடுத்து நடிகை சப்தமி கவுடா, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். ஸ்ரீதேவி என்னை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக என் பெயரை தவறாகப் பயன்படுத்தி உள்ளார் என்று கூறியுள்ள சப்தமி கவுடா, இதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.