தென்னிந்திய சினிமா

“திருமணமான ஆண்கள் மட்டும் முத்தக் காட்சியில் நடிக்கலாமா?” - சமந்தா சீற்றம்

செய்திப்பிரிவு

‘திருமணமான ஆண்கள் மட்டும் முத்தக் காட்சியில் நடிக்கலாமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் சமந்தா.

சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தெலுங்குப் படம் ‘ரங்கஸ்தலம்’. ராம் சரண் ஹீரோவாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில், ராம் சரணுடன் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார் சமந்தா.

படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், ‘திருமணமான பிறகு முத்தக் காட்சியில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அந்தக் கேள்விக்குப் பதில் அளித்த சமந்தா, “திருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடித்தால் மட்டும் யாரும் கேள்வி கேட்பதில்லை. அதுவே நடிகைகள் என்றால் மட்டும் ஏதேதோ கேட்கிறீர்கள்” என்று சீறிவிட்டார்.

மேலும், “நான் ராம் சரண் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். கேமரா ட்ரிக்ஸில் அதை லிப் லாக் காட்சியாக மாற்றிவிட்டார்கள்” என்று முத்தக் காட்சியின் ரகசியத்தையும் கூறிவிட்டார் சமந்தா.

SCROLL FOR NEXT