65-வது தேசிய திரைப்பட விருதுகளில், ‘பாகுபலி 2’ படத்தின் சண்டைப் பயிற்சியாளர் பெயர் தவறுதலாக அறிவிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்பட்டுள்ளது.
65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், ‘பாகுபலி 2’ படத்துக்கு சிறந்த வெகுஜனப் படம், சிறந்த சண்டைப் பயிற்சி இயக்குநர், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என மூன்று பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், சண்டைப் பயிற்சி இயக்குநர் பெயர் அப்பாஸ் அலி மொகுல் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அப்படி ஒருவர் ‘பாகுபலி’யின் முதல் பாகத்துக்கோ, இரண்டாம் பாகத்துக்கோ பணியாற்றவில்லை என்று செய்திகள் வெளியாகின.
‘பாகுபலி’ படத்தில் பணியாற்றியது கிங் சாலமோன், கிங் விட்டகெர், கெச்சா கம்பக்டே என்பது தெரியவர, பெயர்கள் மாற்றி அறிவிக்கப்பட்டது. அதிகாரபூர்வ இணையதளத்திலும் பெயர்கள் மாற்றப்பட்டன.