தென்னிந்திய சினிமா

தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் படம் இயக்கும் அட்லீ

செய்திப்பிரிவு

தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் அட்லீ.

ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லீ, ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு விஜய்யை வைத்து ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கினார். ‘இரண்டாவது படமே விஜய்யுடனா... அடுத்தடுத்து இரண்டு படங்களா...’ என கோடம்பாக்கமே ஆச்சரியப்பட்டது.

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படம் பற்றி தகவலைத் தெரிவித்திருக்கிறார் அட்லீ. சென்னையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அட்லீ, ‘அடுத்து தெலுங்கில் படம் இயக்கப் போகிறேன். தெலுங்கின் மிகப்பெரிய ஸ்டார் இந்தப் படத்தில் நடிக்கிறார். அவர் யார் என்ற விவரத்தை விரைவில் வெளியிடுவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT