தென்னிந்திய சினிமா

தயாராகும் ‘அர்ஜுன்ரெட்டி-2’

செய்திப்பிரிவு

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் இதில் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்குப் பிறகு, அவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்துள்ளன. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘நடிகையர் திலகம்’ படத்தில் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், ‘அர்ஜுன் ரெட்டி’ 2-ம் பாகம் உருவாகுமா என விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டதற்கு, ‘‘இயக்குநர் சந்தீப்பும் நானும் இதுகுறித்து ஏற்கெனவே பேசிவிட்டோம். 40 வயதில் அர்ஜுன் ரெட்டியின் வாழ்க்கை எப்படி இருக் கும் என்பது தான் 2-ம் பாகத்தின் கதை” என்றார். ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக், பாலா இயக்கத்தில் ‘வர்மா’ என்ற பெயரில் உருவாவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT