தென்னிந்திய சினிமா

யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்' படத்தில் நயன்தாரா?

செய்திப்பிரிவு

பெங்களூரு: பிரசாந்த் நீல் இயக்கிய ‘கே.ஜி.எஃப்’ படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமானவர் யாஷ். இவர் அடுத்து நடிக்கும் ‘தி டாக்ஸிக்’ படத்தை நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சகோதரி கேரக்டரில் இந்தி நடிகை கரீனா கபூர் நடிப்பதாகக் கூறப்பட்டது. அவரும் படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் நடிப்பதை உறுதிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகிவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருக்கிறார், என்கிறார்கள். அவர் கதையை கேட்டுவிட்டு நடிக்க சம்மதித்துள்ளதாகவும் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டபின், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

SCROLL FOR NEXT