ஹைதராபாத்: நடிகர் நானி நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நானி நடித்து கடந்த ஆண்டு வெளியான படம், ‘தசரா’.
காதல் மற்றும் ஆக்ஷன் கதையை கொண்ட இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்தார். தமிழிலும் வெளியான இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி இருந்தார். இந்நிலையில் அவர் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் நடிக்கிறார். நானியின் 33-வது படமான இதை, ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார். இது தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், தலைவராக இருக்க அடையாளம் தேவையில்லை என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது.