தென்னிந்திய சினிமா

அர்ப்பணிப்புமிக்க நடிகர்களுடன் வளர விரும்புகிறார் மணிரத்னம்: சந்தோஷ் சிவன்

செய்திப்பிரிவு

அர்ப்பணிப்புமிக்க நடிகர்களுடன் இயக்குநர் மணிரத்னம் வளர விரும்புகிறார் என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, சிம்பு என பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் மணிரத்னத்தின் நடிகர்கள் தேர்வு குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில், ''சுவாரசியமான நடிகர்களின் கலவை இப்படம். இயக்குநர் மணிரத்னம் அர்ப்பணிபுமிக்க திறமையான, நேரம் தவறாத  நடிகர்களுடன் வளர விரும்புகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT