தென்னிந்திய சினிமா

கூகுள் தேடலில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய ப்ரியா பிரகாஷ் வாரியர்

ஏஎன்ஐ

கூகுள் தேடு பொறியில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி ப்ரியா பிரகாஷ் வாரியர் முதலிடம் பிடித்துள்ளார்.

மலையாளத்தில் 'ஒரு அதார் லவ்’ படத்திலிருந்து 'மானிக்க மலராயா பூவி' என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடலை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்திருக்கிறார்கள். இதில் சில காட்சிகளே வந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர். ஒரே நாளில் இவருடைய ட்விட்டர் பக்கத்தில் (@priyapvarrier) பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையும் எகிறியது.

இந்நிலையில், தற்போது கூகுள் தேடு பொறியில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி ப்ரியா பிரகாஷ் வாரியர் முதலிடம் பிடித்துள்ளார்.

அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் 3 மில்லியன் பேர் இவரைப் பின்தொடர்கின்றனர். ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், கூகுள், இன்ஸ்டாகிராம் என இணையத்தின் சென்சேஷனாகவே மாறிவிட்டார் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

SCROLL FOR NEXT