தென்னிந்திய சினிமா

‘சுயம்பு' படத்துக்காக சம்யுக்தா குதிரையேற்ற பயிற்சி

செய்திப்பிரிவு

சென்னை: நிகில் சித்தார்த்தா நடிப்பில் உருவாகும் படம், 'சுயம்பு'. வரலாற்றுக் கதையைக் கொண்ட இந்தப் படம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டூடியோ சார்பில் புவன், ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்குகிறார். சம்யுக்தா நாயகியாக நடிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்காக சம்யுக்தா குதிரையேற்றப் பயிற்சி பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர், "ஒரு நடிகையாக புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது எனக்குக் கிடைத்த பாக்கியம். ‘சுயம்பு’ படத்துக்காக, நான் குதிரை சவாரி கற்றுக் கொண்டிருக்கிறேன். இது ஒரு ஆன்மிக மற்றும் இனிமையான அனுபவமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT