தென்னிந்திய சினிமா

யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் கரீனா கபூர்

செய்திப்பிரிவு

பெங்களூரு: கே.ஜி.எஃப் படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர், யாஷ். இவர் அடுத்து நடிக்கும் படத்தை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். படத்துக்கு டாக்ஸிக் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

கேவிஎன் புரொடக்ஷன்ஸ், மான்ஸ்டர்மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றன. யாஷின் 19 வது படமான இதில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் கான் இதில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT