தென்னிந்திய சினிமா

மம்மூட்டி - ஜோதிகா படத்துக்கு மத்திய கிழக்கு நாடுகளில் தடை

செய்திப்பிரிவு

கொச்சி: நடிகர் மம்மூட்டி, ஜோதிகாவுடன் நடித்துள்ள மலையாள படம், ‘காதல் தி கோர்’ இதை‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கி உள்ளார். மம்மூட்டி தனது மம்மூட்டி கம்பெனி சார்பில் தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் 23-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் குவைத், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இந்தப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் கதையில் தன்பாலின ஈர்ப்பாளர் தொடர்பான விஷயங்கள் இருப்பதால் அந்த நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT