தென்னிந்திய சினிமா

அனுஷ்கா நடிப்பில் உருவாகிறது ‘பாகமதி 2’

செய்திப்பிரிவு

சென்னை: பாகுபலி படங்களுக்குப் பிறகு நடிகை அனுஷ்கா நடித்த படம், பாகமதி. தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்தை ஜி.அசோக் இயக்கி இருந்தார். ஜெயராம், உன்னி முகுந்தன், முரளி சர்மா, ஆஷா சரத் உட்பட பலர் நடித்திருந்தனர். தமன் இசை அமைத்த இந்தப் படம் வெற்றி பெற்றது. இதன் அடுத்த பாகம் இப்போது உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. யுவி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தமிழ், தெலுங்கில் தயாரிக்கிறது என்கிறார்கள்.

அனுஷ்கா நடித்து சமீபத்தில் வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படம் தமிழ், தெலுங்கில் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT