கொச்சி: மலையாள நடிகையான லேனா, தமிழில், அனேகன், திரவுபதி படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தான் மனநல மருத்துவம் பற்றி படித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், மனநலத்துக்கு கொடுக்கப்படும் மருந்துகள் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். தான் மருத்துவ உளவியலாளர் என்பதால், அந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.
நடிகை லேனாவின் கருத்தை இந்திய மருத்துவ உளவியலாளர்கள் சங்கத்தின் கேரள பிரிவு மறுத்துள்ளது. “அவர் உரிமம் பெற்ற மருத்துவ உளவியலாளர் அல்ல, லேனாவின் கருத்துகள், பொதுமக்களை தவறாக வழிநடத்தும். மருத்துவ உளவியல் அல்லது மருத்துவம் தொடர்பான தகுதி வாய்ந்த நிபுணர்களின் கருத்து அல்லது ஆலோசனையை மக்கள் பெறுவதுதான் நல்லது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்