தென்னிந்திய சினிமா

ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது 2.0: மலையாள விநியோகஸ்தர் தகவல்

ஸ்கிரீனன்

ஏப்ரல் 27-ம் தேதி '2.0' வெளியாகும் என மலையாள பதிப்பு விநியோக உரிமையைக் கைப்பற்றி இருக்கும் ஆகஸ்ட் சினிமாஸ் அறிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 26-ம் தேதி வெளியீடாக இருந்த '2.0', கிராபிக்ஸ் பணிகள் தாமதத்தால் ஏப்ரலில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

மலையாள பதிப்பின் விநியோக உரிமையை கடும் போட்டிக்கு இடையே ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிறுவனம் விடுத்துள்ள விளம்பரத்தில் 'ஏப்ரல் 27 வெளியீடு' எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

'2.0' படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்கு இடையே, 'இந்தியன் 2' படத்தின் முதற்கட்ட பணிகளையும் கவனித்து வருகிறார் இயக்குநர் ஷங்கர். இப்படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

SCROLL FOR NEXT