தென்னிந்திய சினிமா

‘ரா’ ஏஜென்டாக நடிக்கும் ஷாம்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடிகர் ஷாம், தமிழ், தெலுங்கில் நடித்துவருகிறார். இந்த வருடத் துவக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் விஜய்யின் சகோதரராக வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்த ஷாம், இப்போது சீனு வைட்லா இயக்கும் படத்தில் ‘ரா’ ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கடந்த 20 நாட்களாக இத்தாலியில் உள்ள மிலன், மடேரா மற்றும் ரோம் உள்ளிட்ட நகரங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது. இதில் ஷாம் பங்குபெற்ற அதிரடியான 3 சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.

இதில் கோபிசந்த், காவியா தாப்பர்முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT