தென்னிந்திய சினிமா

தசராவை முன்னிட்டு ‘கேம் சேஞ்சர்’ முதல் பாடல்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண், கியாரா அத்வானி நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் அஞ்சலி, சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் அடுத்த வருடம் ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜருகண்டி’ என்ற பாடல் வெளியாவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் கடந்த மாதம் கசிந்தது.

இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதன் முதல் பாடல், தசராவை முன்னிட்டு வரும் 22 அல்லது 23ம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT