தென்னிந்திய சினிமா

ஒரே ப்ரேமில் தோனியும், மோகன்லாலும் - வைரலாகும் புகைப்படங்கள்

செய்திப்பிரிவு

எம்.எஸ்.தோனியும், மோகன்லாலும் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இந்தப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கிரிக்கெட்டர் எம்.எஸ்.தோனி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். தவிர, தோனி சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறது.

தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி தயாரிப்பில் அண்மையில் வெளியானது ‘எல்ஜிஎம்’. மற்றொருபுறம் நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மலைகோட்டை வாலிபன்’ அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில் அவரவர் துறையில் சிறந்து விளங்கும் இந்த இருவரும் இணைந்து விளம்பரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். ‘ஒரே ஃப்ரேம்... இரண்டு லெஜண்டுகள்’ என ரசிகர்கள் கேப்ஷனிட்டுள்ளனர். மோகன்லாலும் - தோனியும் இண்டிகோ பெயிண்ட்ஸ் விளம்பரத்துக்காக ஒன்றிணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT