தென்னிந்திய சினிமா

‘கப்ஜா’ இயக்குநர் படத்தில் கிச்சா சுதீப்

செய்திப்பிரிவு

பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில் ‘நான் ஈ’, ‘புலி’, ‘முடிஞ்சா இவனப்புடி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘விக்ராந்த் ரோணா’ பான் இந்தியா படமாகத் தமிழிலும் வெளியானது. இந்நிலையில் மீண்டும் ஒரு பான் இந்தியா படத்தில் அவர் நடிக்கிறார். உபேந்திரா, ஸ்ரேயா நடிப்பில் உருவான ‘கப்ஜா’ படத்தை இயக்கிய ஆர்.சந்துரு அடுத்து இயக்கும் படத்தில் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்கிறார். படத்தின் திரைக்கதையை ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்களின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் மேற்பார்வையிடுகிறார். மெகா பட்ஜெட்டியில் உருவாகும் இந்தப் படத்தைக் கன்னட திரைப்பட நிறுவனமான ஆர்.சி.ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்நிறுவனம் 5 மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிக்க இருக்கிறது.

SCROLL FOR NEXT