மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த 'புலிமுருகன் ' படத்தில் இடப்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஆஸ்கர் விருதுப் பட்டியலில் தேர்வாகியுள்ளன.
வைஷாக் இயக்கத்தில் மோகன்லால், கமலினி முகர்ஜி, ஜெகபதிபாபு, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 'புலிமுருகன்' திரைப்படம் வெளியானது. பெரும் பொருட்செலவில் வெளியான இப்படம் மலையாளத்தில் அதிக வசூலான படம் என்ற சாதனையை படைத்தது.
இந்த நிலையில், 90-வது ஆஸ்கர் விருதுகளுக்கான தெரிவுப் பட்டியலில் 'ஒரிஜினல் பாடல்கள்' பிரிவில் 70 பாடல்கள் தேர்வாகியுள்ளன. இதில் புலிமுருகன் திரைப்படத்தின்
காடனயும் கால்சிலம்பே , மானத்தே மரிகுரும்பே இரண்டு பாடல்கள் இடப்பெற்றுள்ளன. 'புலி முருகன்' திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் புலிமுருகன் படத்தின் இரண்டு பாடல்கள் தேர்வாகியுள்ளதற்கு கோபி சுந்தார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அனைத்து கடவுளின் கருணையால் சாத்தியப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.