பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். இதையடுத்து தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘தமிழில் இதுவரை நடிக்காததற்கு யாரும் அழைக்காததே காரணம்’ என்று அவர் கூறியிருந்தார். அவருக்கு இப்போது மற்ற மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கும் ‘டைசன்’ படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்துள்ளார். “அஜித் சிறந்த மனிதர். அவர் தொடர்பான வீடியோக்களை பார்க்கிறேன். அவர், நடிப்போடு பைக் டூர் செல்கிறார். மிகவும் சாதாரணமாக இருக்கிறார். அது, என்னை மிகவும் தொட்டது” என்று தெரிவித்துள்ளார்