தென்னிந்திய சினிமா

பிரபாஸின் பேஸ்புக் கணக்கு முடக்கம்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பான் இந்தியா ஸ்டாரான பிரபாஸ், இப்போது ‘சலார்’ படத்தில் நடித்துள்ளார். இதை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இதையடுத்து அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோருடன் ‘கல்கி 2829 கிபி’ படத்தில் நடிக்கிறார். இதை நாக் அஸ்வின் இயக்குகிறார். அடுத்து மாருதி நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருடைய பேஸ்புக் கணக்கை மர்மநபர்கள் திடீரென முடக்கியுள்ளனர். இதை நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது குழு அதைச் சரி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT