தென்னிந்திய சினிமா

ஜெயிலர் Vs ஜெயிலர் - ஒரே நாளில் வெளியாகும் ரஜினி, தியான் ஸ்ரீனிவாசன் படங்கள்!

செய்திப்பிரிவு

ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படமும், மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசனின் ‘ஜெயிலர்’ படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘ஜெயிலர்’. இதில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சுனில், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்திருக்கும் இந்தப் படத்தின் ‘காவாலா’ பாடலும் ‘ஹூக்கும்’ பாடலும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மலையாளத்தில தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தை ஷகீர் மடத்தில் இயக்கியுள்ளார். பீரியட் டிராமா கதையாக உருவாகியுள்ள இப்படம் உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டது. இந்தப் படமும் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டும் வெவ்வேறு கதையை கொண்ட படம் என்றாலும் ஒரே பெயரில் வெளியானால், ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகி, கேரளாவில் மட்டுமாவது பெயரை மாற்ற கோரிக்கை வைத்தனர். ஆனால், மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒரே நாளில் ஒரே பெயர் கொண்ட இரண்டு படங்களும் வெளியாக உள்ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT