தென்னிந்திய சினிமா

மோகன்லாலின் பான் இந்தியா பட ஷூட்டிங் தொடக்கம்

செய்திப்பிரிவு

மோகன்லால் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் ‘விருஷபா’. இதில் மோகன்லால் மகனாக ரோஷன் மேகா நடிக்கிறார். இவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் - நடிகை சிவரஞ்சனி தம்பதியின் மகன்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனங்கள் வழங்க, ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

இதில் ஷனாயா கபூர், சாரா கான், ஸ்ரீகாந்த், ராகிணி திவேதி, உட்படப் பலர் நடிக்கின்றனர். நந்தா கிஷோர் இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. கிளாப் போர்டுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோகன்லால் இதைத் தெரிவித்துள்ளார்..

SCROLL FOR NEXT